ஜூலை 08, புதுடெல்லி (New Delhi): மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புதிய இக்யூஏ (EQA) எலக்ட்ரிக் காருடன் சேர்த்து, இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இக்யூபி (EQB) எலக்ட்ரிக் காரையும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ எலக்ட்ரிக் கார் ஆரம்ப விலையாக ரூ.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பென்ஸ் காராக இக்யூஏ விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் இக்யூபி எலக்ட்ரிக் காரையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு மேம்படுத்தி உள்ளது. 250+ மற்றும் 350 4மேட்டிக் என 2 விதமான வேரியண்ட்களில் புதிய மெர்சிடிஸ் இக்யூபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 125 Crore Cash Reward: பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடி பரிசுத்தொகை.. யார், யாருக்கு எவ்வளவு தெரியுமா?!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)