ஜூலை 08, மும்பை (Mumbai): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) இறுதிப்போட்டியில், எய்டன் மார்க்கம் தலைமையிலான தென்னாபிரிக்க அணியை தோல்வியுறச்செய்துள்ள ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி டி20 உலகக்கோப்பையை (India Vs South Africa IND Vs SA) கைப்பற்றி அசத்தி இருக்கிறது.
அந்த போட்டியில் 176 ரன்கள் இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியால், கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட் விழ ஆரம்பித்தது. அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லை கோட்டில் சூர்யகுமார் யாதவ் கேட்ச்சில் அவுட் ஆனதைத் தொடர்ந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. Worm In Puri Curry: பூரி மசாலாவில் கடந்த புழு.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!
இந்திய அணி வருகை: இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயல் தீவிரமடைய, இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. புயல் கரையை கடந்ததை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தனர். அங்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியை (PM Modi) சந்தித்தனர்.
பிரமாண்ட பேரணி: அதைத்தொடர்ந்து மும்பையில் மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு திறந்தவெளி பேருந்தில் நின்று கொண்டு ரசிகர்களுக்குக் கோப்பையைக் காட்டியபடி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆடிப் பாடியும் கிரிக்கெட் வீரர்களை உற்சாகமாக ரசிகர்கள் வரவேற்றனர். அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்டது. வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான். SC On Menstrual Leave: மாதவிடாய் கால விடுப்பு.. உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்..!
யாருக்கு எவ்வளவு?: அதில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்படவுள்ளது.