ஆகஸ்ட் 05, டெல்லி (Automobile News): டிவிஎஸ் (TVS) நிறுவனம் புதிய ரோனின் பராக்ரம் (RONIN Parakram) எனும் பைக் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. பராக்ரம் ஆனது 1999 ஆம் ஆண்டில் அரங்கேறிய கார்கில் போரின் நினைவாக உருவாக்கப்பட்ட சிறப்பு பதிப்பு ஆகும். குறிப்பாக, கார்கில் போர் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக இந்த பைக்கை டிவிஎஸ் தயார் செய்துள்ளது. இந்த பைக்கில் ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த டயர்கள், பிரத்யேக வால் பகுதியைக் கொண்ட இருக்கை, ஹெட்லைட், மட்குவார்டு மற்றும் எஞ்சின் குவார்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் மாடலில் 225 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் ரூ. 1.49 லட்சம் தொடங்கி ரூ. 1.73 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. TNPL 2024: தமிழ்நாடு பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது திண்டுக்கல்; கோவை அணி தோல்வி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)