TNPL 2024 (Photo Credit: @TNPremierLeague X)

ஆகஸ்ட் 05, சேப்பாக்கம் (Cricket News): தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில், தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamilnadu Premier League TNPL 2024) போட்டிகள் நடைபெற்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அளவிலான கிரிக்கெட் போட்டியின், 2024 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் நேற்று தனது இறுதிக்கட்டத்தை கண்டது. 8 அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், இறுதிப் போட்டிக்கு லைக்கா கோவை கிங்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் தகுதி பெற்றன. DD Vs ITT Q2 Highlights: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; அஸ்வின் அரைசதம் விளாசல்.. இறுதிப் போட்டிக்கு தகுதி..!

130 ரன்கள் இலக்கு:

நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், திண்டுக்கல் அணி முதலில் டாசைவென்று பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து, கோவை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியின் சார்பில் விளையாடிய சுஜய் 12 பந்துகளில் 22 ரன்னும், சுதர்சன் 14 பந்துகளில் 14 ரன்னும், ராம் அரவிந்த் 26 பந்துகளில் 27 ரன்னும், ரகுமான் 17 பந்துகளில் 25 ரன்னும் அதிகபட்சமாக அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த கோவை அணி, 129 ரன்கள் எடுத்திருந்தது.

2024 சாம்பியன் திண்டுக்கல்:

மறுமுனையில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விமல் மற்றும் சிவம் சிங் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவுட்டாகி வெளியேற, அணியின் வெற்றி கேள்விக்குறியான நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. அந்த வகையில், அஸ்வின் 46 பந்துகளில் 52 ரன்னும், பாபா இந்திரஜித் 35 பந்துகளில் 32 ரன் அடித்து இருந்தனர். முடிவில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 131 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது. இதன் வாயிலாக தமிழ்நாடு பிரிமியர் லீக்கில், கோப்பையை தனதாக்கி திண்டுக்கல் அணி தனது முதல் சாம்பியன்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.