ஜூன் 27, புதுடெல்லி (New Delhi): யமஹா (Yamaha) நிறுவனம் தற்போது ஒய்-ஏஎம்டி (Y-AMT) என்ற கியர்பாக்ஸை தயாரித்து உள்ளது. வரும் காலத்தில் இந்த கியர்பாக்ஸை அந்த நிறுவனம் அதன் முக்கிய தயாரிப்புகளில் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வடிவமைக்கப்பட்டு இருக்கும், புதிய ஒய்-ஏஎம்டி மின்னணு சுவிட்சுகளைப் பயன்படுத்துகிறது. டிராஃபிக்கிற்கு ஏற்ப கியரை மாற்ற வேண்டும் என்கிற டென்ஷன் இல்லாமல் ரைடர்கள் பைக்கை இயக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2.8 கிலோ. இந்த கியர் எப்படி செயல்படும் என்கிற டீசர் வீடியோவையே அது வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவில் வரும் யமஹா பைக்கில் கிளட்ச் லிவர், காலால் இயக்கப்படும் கியர் அமைப்புகள் இல்லை. அதற்கு பதிலாக கை முறையாக சுவிட்ச் செய்வதற்கான அமைப்பே உள்ளது. Lightning Strikes are Real: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. இடியுடன் போட்டி போட்டு ஆடியப் பெண்.. வைரலாகும் வீடியோ..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)