Lightning (Photo Credit: @namma_vjy X)

ஜூன் 27, பீகார் (Bihar News): பீகாரில் மாடியில் ரீல் எடுக்க ஆடிக் கொண்டிருந்த பெண்ணின் அருகிலேயே இடி விழுந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் மாடியில் ரீல்ஸ் எடுக்க ஆடுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அருகிலேயே இடி விழுகிறது (Lightning Strikes). அந்த சம்பவமானது அப்பெண்ணின் ரீல் வீடியோவில் பதிவாகியது. தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இச்சம்பவமானது பீகாரில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

இடி விழுவதற்கான காரணம்: மழை வரும்போது இடி, மின்னல். பலமான சத்தத்துடன் இடியும், அதீத வெளிச்சத்துடன் மின்னலும் வரும். நீர் பள்ளத்தைநோக்கி ஓடுவதுபோல, மேகத்தில் உருவாகியிருக்கும் மின்சக்தி, அதாவது இடி மின்னல், பூமியில் உயரமான இடத்தை நோக்கியே தாவும், கிடைத்தபொருள்வழியே பூமியை நோக்கி வந்து பூமியில் பரவி அழிந்துபோகும். இதில் இருப்பதிலேயே உயரமாய் உள்ள கட்டிடம் தாக்கப்படும் என்பதால், அதன் உச்சியில் ஒரு உலோகக்கம்பியை வைத்து அதை உயரமாக்கி, அதற்குத்தாவும் மின்சக்தி கட்டடத்திற்கு போகாதபடி ஒரு கம்பி வழியே பூமிக்கு வரும்படி அமைத்திருப்பார்கள். Kenya Violence: கென்யாவில் வெடித்த வன்முறை.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை..!

பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்: இடி மின்னல் சமயத்தில் நீங்கள் திறந்த வெளியில் இருக்கும் பட்சத்தில் நண்பர்களுடன் இருந்தால் ஒருவரை ஒருவர் தொடாமல் தனித்தனியாக பிரிந்து நின்று கொள்ளவும். மின்னல் இடி தாக்குதலுக்கு உள்ளாகும் இடமான உயரமான மரங்கள், மின்கம்பங்கள், மின்வயர்கள், ஆறுகள் குளங்கள் இவற்றை விட்டு தள்ளி இருக்கவும்.இடி இடிக்கும்போது மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம். மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகேயும் செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியின் அருகில் செல்லக் கூடாது. இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் நிற்காமல் உடனடியாக கான்கிரீட் கட்டடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.