Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்கள்..!

ட்ரோன் கேமரா மூலம் ரீல் தயாரிக்கும் இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் காயமடைந்தனர்.

Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்கள்..!
Stunt Video (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். சிலரோ லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். அந்த வகையில் டெல்லி-பௌரி தேசிய நெடுஞ்சாலையில் (Delhi-Pauri National Highway) ட்ரோன் கேமரா மூலம் ரீல் எடுத்தவாறு சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த  இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தனர். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. Train Hits Goats: இரண்டு ரயில்கள் மோதி 50 ஆடுகள் பலி..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).