மார்ச் 18, திருவனந்தபுரம் (Cinema News): நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் நடித்து வருகிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றடைந்தார். விஜய்யை பார்க்க, பல ஆயிரம் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே விஜய் தனது காரில் ஏறி சென்றார். விஜயின் காரை நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரை செல்ல விடாமலும் தடுத்தனர். இதனையடுத்து நடிகர் விஜய் பெரும் சிரமத்திற்கு பிறகு ஹோட்டலை அடைந்தார். Kareena Kapoor Confirms Kannada Debut: தென்னிந்தியாவில் களம் இறங்கும் "சமக் சலோ".. யாஷுடன் நடிக்கப் போகும் கரீனா கபூர்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)