Kareena (Photo Credit: Facebook)

மார்ச் 18, சென்னை (Cinema News): ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர், கன்னட நடிகர் யாஷ் (Yash). இவர், அடுத்து நடிக்கும் படத்தை நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். படத்துக்கு ‘டாக்ஸிக்’ (Toxic) என்று தலைப்பு வைத்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன. யாஷின் 19 -வது படமான இதில், இந்தி நடிகை கரீனா கபூர் (Kareena Kapoor) நடிக்கவுள்ளார். School Girl Suicide: கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – பள்ளி மாணவியின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்..!

இதுதொடர்பாக பேசிய அவர், “முதன்முறையாக, மிகப்பெரிய தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்கிறேன். பான் இந்தியா படமான இதன் படப்பிடிப்பு எங்கு நடக்க இருக்கிறது என்பது தற்போது தெரியவில்லை. இதை என் ரசிகர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.