Raayan Trailer Update: தனுஷின் 'ராயன்' பட டிரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு குழு அறிவிப்பு.!

நடிகர் தனுஷ் ரசிகர்களால் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் ராயன் திரைப்படத்தின் டிரைலர், ஜூலை 16ம் தேதியான இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.

Raayan Trailer Update: தனுஷின் 'ராயன்' பட டிரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு குழு அறிவிப்பு.!
Raayan Movie Poster (Photo Credit: @SunPictures X)

ஜூலை 16, சென்னை (Cinema News): ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகியுள்ள தனுஷின் ராயன் (Raayan Movie) திரைப்படம், வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் (Dhanush K Raja) எழுத்து-இயக்கம்-நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்திற்கு, ஏ.ஆர் ரஹ்மான் (AR Rahman) இசையமைத்து இருக்கிறார். தனது குடும்பத்தை கொலை செய்த கும்பலை பழிவாங்க புறப்படும் ராயன், தனது பயணத்தில் சந்திக்கும் பல விஷயங்களை மையப்படுத்தி ராயன் படத்தின் கதை அமைந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 50 வது திரைப்படமான ராயன், அவரின் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாகும் இருக்கிறது. இப்படத்தின் வெளியீடு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என படத்தயாரிப்பு குழு அறிவித்து இருக்கிறது. Doda Terror Attack: ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. 78 நாட்களில் நடந்த 11வது தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).