பிப்ரவரி 03, ஹைதராபாத்: தமிழில் சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் கே. விஸ்வநாத் (Director K. Viswanath). இவர் பத்மஸ்ரீ (Padma Shri), தாதாசாகேப் பால்கே விருது (Dada Saheb Phalke Award) பெற்ற இயக்குனர்களில் ஒருவராவார். தெலுங்கு சினிமாவில் பிரதானமாக அறியப்பட்ட கே. விஸ்வநாத், தமிழில் பல படங்களில் அப்பா, தாத்தா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குருதிப்புனல், பகவதி (Bagavathi) படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம், புதியகீதை, இராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா (Lingaa), உத்தமவில்லன், தனுஷுடன் (Dhanush) இவர் யாரடி நீ மோஹினி (Yaaradi Nee Mohini) திரைப்படத்தில் நயன்தாராவுக்கு (Nayanthara) தாத்தாவாக நடித்திருப்பார் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் (Hyderabad) தனது குடும்பத்தோடு வசித்து வந்த கே. விஸ்வநாத், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட நோயால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92 ஆகிறது. சினிமா துறையில் அவர் பல விருதுகளை வென்று, மக்களின் மனதிலும் நின்று இன்று இயற்கை எய்தியுள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை ட்விட்டர் பக்கத்தில்  (#RIPVishwanathGaru , #RipLegend) என தெரிவித்து வருகின்றனர். Girl Smashed Young man: நான் உனக்கு பொண்டட்டியா?? – நடுரோட்டில் இளைஞரை புரட்டியெடுத்த சிங்கப்பெண்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)