Frozen 3 Update: குழந்தைகள் எதிர்பார்த்த அட்டகாசமான அறிவிப்பு.. Frozen 3 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடக்கம்.!

உலகளவில் பலருக்கும் பிடித்த Frozen திரைப்படத்தின் 3 ம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதன் தயாரிப்பு நிறுவனமான Disney-யால் வெளியிடப்பட்டுள்ளது.

Frozen Movie Poster (Photo Credit: Twitter)

பிப்ரவரி 09: ஹாலிவுட்டில் (Hollywood Animation Movies) குழந்தைகள் விருப்பப்படமான Frozen படத்தின் 2 பாகங்கள் (Frozen I & Frozen II) ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இதன் 3ம் பாகம் எப்போது (Frozen III) வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், Frozen படத்தின் 3ம் பாகம் நவம்பர் 2024ல் வெளியாகலாம் என்றும், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Frozen படங்கள் உலகளவில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரிக்குவித்த நிலையில், Forzen 3 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் கிறிஸ்டினா பெல், இடினா மேனிஸில், ஜோஷ் காட், ஸ்டெர்லிங் கே பிரவுன், மார்தா பிலிம்ப்டன் உட்பட பலரும் இணைந்துள்ளனர். படத்தை Disney நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு – முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!