God Mode Song: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு.. வெளியானது கருப்பு படத்தின் God Mode பாடல்.!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு (Karuppu Movie) படத்தின் God Mode பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 20, சென்னை (Cinema News Tamil): நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு முன்னணி இயக்குனராகவும் அடையாளம் பெற்றுள்ளார். இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்த ஆர்.ஜே.பாலாஜி கருப்பு என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா, திரிஷா, யோகிபாபு, ஷிவாதா உட்பட பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பு பணிகளை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாக நிலையில், பொங்கலுக்கு படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் God Mode லிரிக் வீடியோவும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Vishal: சினிமா விருதுகள் மீது நம்பிக்கை இல்லை.. குப்பைத்தொட்டியில் போடுவேன் - விஷால் சர்ச்சை கருத்து.!
நடிகர் சூர்யாவின் கருப்பு பட God Mode பாடல் (God Mode Lyric Song):