மார்ச் 21, தாராஷிவ் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தாராஷிவ் (Dharashiv) மாவட்டத்தில் உள்ள பரண்டா தாலுகாவில் உள்ள கபில்புரி பகுதியில் கிராம மக்களை நான்கு மாதங்களாக பயமுறுத்தி, 20க்கும் மேற்பட்ட விலங்குகளை சிறுத்தை (Leopard) கொன்றது. இந்நிலையில், நேற்று (மார்ச் 20) இரவு 11:30 மணியளவில் வனத்துறை கூண்டில் பிடிக்கப்பட்டது. சிறுத்தை பிடிப்பட்டதை அடுத்து, அச்சத்தில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கு முன்பு பலமுறை பிடிக்க முயன்றும் சிறுத்தை தப்பியுள்ளது. இதனையடுத்து, கூண்டில் சிறுத்தை இருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. Online Relationship: 7 மாதம் சித்தியுடன் காதல்.. உண்மை அறிந்த வாலிபர் விவரீத முடிவு.., அதிர்ச்சி சம்பவம்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)