
மார்ச் 21, முர்ஷிதாபாத் (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் (Murshidabad) ராணிநகரை சேர்ந்த 18 வயது வாலிபர், ஆன்லைன் டேட்டிங் ஆப் (Dating App) மூலமாக ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். சுமார் 7 மாதங்களுக்கும் மேலாக, இருவரும் ஒரு ஆன்லைன் தளம் மூலம் சந்தித்து, செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, தொலைபேசி அழைப்புகள் மூலம் பேசத் தொடங்கினர். அந்தப் பெண் தனது உண்மையான அடையாளத்தையும் வயதையும் மறைத்து, தன்னை விவாகரத்து பெற்றவராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் காதல் உறவில் ஈடுபடத் தொடங்கினர். Mobile Phone Explosion: பைக் ஓட்டும்போது பாக்கெட்டில் செல்போன் வெடித்து விபரீதம்; 19 வயது வாலிபர் படுகாயம்..!
வாலிபர் விவரீத முடிவு:
இந்நிலையில், தான் காதலித்து வந்த பெண் தனது தந்தையின் இரண்டாவது மனைவி என்பதை அறிந்த விரக்தியில், வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயன்றுள்ளார். இதனையடுத்து, அவரது தந்தை வீட்டிற்கு வந்தபோது படுக்கையில் மயக்கமடைந்த நிலையில், தனது மகன் கிடந்துள்ளார். உடனே, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் விசாரணை:
இதுகுறித்த விசாரணையில், வாலிபரின் தந்தை தனது முதல் மனைவி இறந்த பிறகு ரகசியமாக மறுமணம் செய்துகொண்டுள்ளார். இரண்டாவது திருமணத்தை தனது குடும்பத்தினரிடம் மறைத்து வைத்தார். இதனிடையே, வாலிபர் தனது மாற்றாந்தாயை காதலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.