Naxals ablaze Construction Machines: சாலைகட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு.. வாகனங்களை தீயிட்டு கொளுத்திய நக்சல்கள்..!
மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் சாலைப்பணிகளை தடுத்து நிறுத்த நக்சல்கள் கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்திய பயங்கரம் நடந்துள்ளது.
பிப்ரவரி 20, கான்கேர்: சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் நிலவி வந்தாலும், அதனை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் அவ்வப்போது மாவோயிஸ்டுகள் அங்கு நடைபெறும் அரசு பணிகளை தடுப்பது வழக்கம். இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள கான்கேர் மாவட்டம் (Kanker District), கோயாலிபெடா (Koyalibeda) பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பணிகளை தடுக்க நினைத்த நக்சல்கள் (Naxals), 2 இயந்திரத்திற்கு தீ வைத்து (Naxals Set ablaze Road Construction Machineries) எரித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். Auto Car Collision 4 Died: பிரசவம் முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் விபத்து.. பச்சிளம் குழந்தை, இளம் பெற்றோர், உறவினர் என 4 பேர் பலி.. எமனாய் வந்த கார்.!