மார்ச் 08, ஹைதராபாத் (Trending Video): சாலை விபத்துகள் என்பது அலட்சியத்தால் அல்லது வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளால் அதிகளவு ஏற்படுகின்றன. இவற்றில் சாலைகளை பகல் மற்றும் இரவு வேளைகளில் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் ஏராளம் என்றும் கூறலாம். குறுகலான சாலையில் இருந்து பிரதான சாலைக்கு திடீரென வருவது, இருட்டான பகுதியில் எவ்வித அறிவுறுத்தலுக்கு இன்றி தேசிய நெடுஞ்சாலையை திடீரென கண்டபோது போன்றவை விபத்திற்கு வழிவகை செய்யும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் சாலையை கடந்து வரும்போது, அவ்வழியாக வந்த காரின் பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்தில் சிக்கினார். இருட்டுப்பகுதியில் இருந்து திடீரென இளைஞர் வந்ததால் தவிர்க்க முடியாத விபத்து ஏற்பட்டது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள காவல் துறையினர், இவ்வாறான இடங்களில் சாலைகளை கடக்க கூடாது என அறிவுறுத்தி இருக்கின்றனர். அந்த பதைபதைப்பு வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. Ben Stokes Reaction After Gill Six: ஷுப்மன் ஹில்லின் சிக்ஸரை பார்த்து இங்கிலாந்து கேப்டன் கொடுத்த ரியாக்சன் - வைரலாகும் வீடியோ உள்ளே.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)