மார்ச் 08, தர்மசாலா (Sports News): இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 2024, இந்தியாவில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி (IND Vs ENG Test Series 2024), ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை 5 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து எதிர்கொண்டது. நான்கு டெஸ்ட் போட்டிகள் ஏற்கனவே முடிந்து, இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று நடப்பு தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், எஞ்சிய இறுதி ஆட்டமானது நேற்று முதல் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா கிரிகெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
சிக்ஸர் & பவுண்டரி மழை: போட்டியின் தொடக்கத்தில் முதல் நாளிலேயே தனது ஒட்டுமொத்த விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து அணி, 57.4 ஓவர்களில் 218 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகியது. அதனைத் தொடர்ந்து, மறுமுனையில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், அதிரடியாக அடித்த ஆட அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் இரண்டாவது நாளான இன்று, மதிய இடைவெளிக்குள் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது. போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். பின் ரோகித் சர்மா - ஷுப்மன் கில் ஜோடி களத்தில் நின்று ஆடிவரும் நிலையில், சிக்ஸர்களும் - பவுண்டர்களும் குவிந்து ரன் அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ரோஹித் தற்போது வரை 3 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் விளாசி இருக்கிறார். ஹில் 5 சிக்ஸர்களும், 12 பவுண்டரிகளும் விளாசி இருக்கிறார். Sudden Death While Dancing: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய 15 வயது சிறுவன் பலி; சோகத்தில் குடும்பத்தினர்.!
நேரலையில் இலவசமாக காண ஜியோ சினிமா: தற்போதைய நிலையில் ரோகித் சர்மா உணவு இடைவெளிக்கு முன் 120 பந்துகளில் 102 ரன்கள் அடித்திருந்தார். ஹில் 142 பந்துகளில் 101 முடித்திருந்தார். எஞ்சிய பிற்பகுதி ஆட்டமும் விறுவிறுப்புடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் 46 ரன்கள் முன்னிலையில் இந்தியா இருக்கிறது. போட்டியை நேரலையில் ஜியோ சினிமா (Jio Cinema) செயலியிலும், தொலைக்காட்சி வாயிலாக ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18) தொலைக்காட்சியிலும் கண்டு ரசிக்கலாம்.
பென் ரியாக்சன் வைரல்: இந்நிலையில், மைதானத்தில் ஹில் தனது சிக்ஸரை பறக்கவிட்டபோது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அதனை வியந்து மனதிற்குள் பாராட்டும் வகையில் தனது முகபாவனையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
English breakfast, @bhogleharsha 😄#IDFCFirstBankTestSeries #BazBowled #INDvENG #JioCinemaSports pic.twitter.com/lpGcswxqHj
— JioCinema (@JioCinema) March 8, 2024