Basketball Player Dies: தேசிய கூடைப்பந்து வீரர் பலி.. மைதானத்தில் நடந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Basket Ball Player Death Video: தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் தனியாக மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, கம்பம் திடீரென சரிந்து ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
நவம்பர் 27, ஹரியானா (Haryana News): ஹரியானா மாநிலம் ரோக்தக்கைச் சேர்ந்த 16 வயது தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர் ஹர்த்திக் ரதி, தனிப்பயிற்சிக்காக மைதானத்தில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கூடைப்பந்து வளையத்தில் கைப்பிடித்து தொங்கும் முயற்சியின் நடுவே, கம்பம் திடீரென வளைந்து அவர்மீது இடிந்தது. தலையிலும் உடலின் பல பகுதிகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட ஹர்த்திக் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்தார். சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இளம் வீரருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஹரியானா ஒலிம்பிக் சங்கம் மாநில அளவிலான அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கே.ஏ. செங்கோட்டையன்.. தவெகவில் இணைய வாய்ப்பு.!