ஜூலை 08, புதுடெல்லி (New Delhi News): சமீபகாலமாகவே டெல்லி மெட்ரோவில் காதல் ஜோடியின் வரம்பு மீறிய செயல்கள், கவர்ச்சி நடனம், அரைகுறை ஆடையுடன் தோன்றுவது என சர்ச்சை செயல்கள் தொடர்ந்து வருகின்றன. மெட்ரோ நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை மீறி இது போன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், சமீபத்தில் பெண் ஒருவர் மெட்ரோவில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் நடன கலைஞரான மனிஷா பொது இடங்களில் தான் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் பூங்காவில் நடனமாடிய போது மக்களால் தாக்கப்பட்டார். தற்போது மீண்டும் அவர் டெல்லி மெட்ரோவில் நடனமாடியது சர்ச்சையை சந்தித்துள்ளது. குடிபோதையில் அரசியல் புள்ளியின் மகன் பெண்ணிடம் அநாகரீகம்.. அரை நிர்வாண வீடியோ வைரல்.! 

மெட்ரோவில் பெண் நடனமாடிய வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)