MNS Leader Son Rahil Shaikh (Photo Credit : @RightWingTimes X)

ஜூலை 07, மகாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிர மாநில அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தியதற்கு மாநில அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அம்மாநிலத்தின் நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவும் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் மகராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழி கொள்கையை திரும்ப பெற போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

பெண்ணிடம் பாலியல் சீண்டல் :

இதனையடுத்து மராட்டிய அரசு மும்மொழி கொள்கையை திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த விஷயத்திற்கான வெற்றி விழா ராஜ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற நிலையில், மகராஷ்டிராவில் மராத்தி பேசா விட்டால் காதுக்கு கீழே அடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை சந்தித்தது. இந்நிலையில் அவரது எம்.என்.எஸ் கட்சித் தலைவரின் மகன் குடிபோதையில் அரை நிர்வாணமாக பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டனத்தை குவித்துள்ளது.

முகம் சுளிக்க வைக்கும் செயல் :

மாநில எம்.என்.எஸ் கட்சியின் துணைத்தலைவர் ஜாவித் ஷேக்கின் மகன் ரஹில் மித மிஞ்சிய போதையில் மேலாடையின்றி கார் ஓட்டி வந்துள்ளார். இந்த கார் பெண்ணின் மீது மோதிய நிலையில், காரில் இருந்து இறங்கி ரஷீத் முகம் சுளிக்கும் விதமாக நடந்து கொண்டு வாக்குவாதம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சமூகவலைத்தளத்தில் பெண் வெளியிடவே, கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றது. மராட்டிய கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறி அரசியல் செய்யும் கட்சிகளின் உண்மை நிலை இதுதானா? என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.

அரை நிர்வாணமாக கார் ஒட்டி வாக்குவாதம் செய்த வீடியோ :