Cow Attack on Women: சாலையில் நடந்துவந்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மாடு; பதைபதைப்பு வீடியோ உள்ளே.!
அகமதாபாத்தில் தெருவில் அலையும் மாடுகளால் பல விபத்துகள் நடப்பதும், மக்கள் திடீர் தாக்குதலை சந்திப்பதும் தொடர்கதையாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் 29, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரோடா நவரங் குடியிருப்பு பகுதியில் நேற்று பெண்மணி ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு 9 மாடுகள் கூட்டம் இருந்த நிலையில், பெண்மணியை மாடு ஒன்று பயங்கரமாக தாக்கியது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்களில் சிலர், மாடுகளை தடியால் அடித்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பதைபதைப்பு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. அகமதாபாத்தில் தெருவில் அலையும் மாடுகளால் பல விபத்துகள் நடப்பதும், மக்கள் திடீர் தாக்குதலை சந்திப்பதும் தொடர்கதையாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். Snake Wrapped Women Leg: கால்களை பற்றிய நல்ல பாம்பு; 3 மணிநேரம் உயிரை கையில் பிடித்து சிவமந்திரம் சொன்ன பெண்மணி.. இறுதியில் நடந்தது இதுதான்.!