ஜூன் 24, டோம்பிவிலி (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, டோம்பிவிலி பகுதியில் வசித்து வரும் பெண்மணி ப்ரீத்தி உமா பாரதி. இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்தகராறில் மனமுடைந்துபோன பெண்மணி, ஆவேசத்தில் தனது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால், படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண்மணி, மும்பையில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவரிடம் மண்பாடா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பதைபதைப்பு சம்பவத்தை, எதிர் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் விடியோவாக பதிவு செய்துள்ளார். இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Two-Wheeler Rider Dies: தெருவில் சுற்றித்திரிந்த மாடு எமனான துயரம்; நீதிமன்ற ஊழியர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மரணம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)