Tirunelveli Vannarpet Accident (Photo Credit: @thinak_ X)

ஜூன் 24, வண்ணாரப்பேட்டை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில், பிரதான சாலையில் சம்பவத்தன்று இரண்டு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டு இருந்தன. அச்சமயம், இருசக்கர வாகன ஓட்டி, நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த நிலையில், அவரை மாடு முட்டித்தள்ளியது.

இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி:

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர், அவ்வழியாக நெல்லையில் இருந்து குமுளி நோக்கி பயணம் செய்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Chicken Piece got Stuck in Throat: போதையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் சோகம்; சிக்கன் பீஸ் மூச்சுக்குழாயில் சிக்கி பரிதாப பலி.! 

சிசிடிவி கேமிராவில் அதிர்ச்சி காட்சிகள்:

உயிரிழந்த நபர் குறித்து விசாரணை செய்கையில், அவர் நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் (வயது 58) என்பது தெரியவந்தது. சம்பவத்தன்று வேலை விஷயமாக வண்ணாரப்பேட்டை பகுதியில் பயணித்தவர் விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. சாலையில் சுற்றித்திரிந்த மாடு மரணத்திற்கு காரணமானது அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் உறுதியானது.

மாடு வளர்ப்போருக்கு எச்சரிக்கை:

இதனையடுத்து, மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும், நேற்று ஒரேநாளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவர்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு ரூ.13 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.