Suicide Attempt Caught on Camera: குடும்ப சண்டையில் விபரீதம்; 4 வது மாடியில் இருந்து குதித்த பெண் தற்கொலை முயற்சி.. அதிரவைக்கும் காட்சிகள்.!

பெண்மணி ஒருவர் குடும்ப சண்டையில் 4 வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Women Suicide Attempt in Dombivili (Photo Credit: @santryal X)

ஜூன் 24, டோம்பிவிலி (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, டோம்பிவிலி பகுதியில் வசித்து வரும் பெண்மணி ப்ரீத்தி உமா பாரதி. இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்தகராறில் மனமுடைந்துபோன பெண்மணி, ஆவேசத்தில் தனது வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால், படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண்மணி, மும்பையில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவரிடம் மண்பாடா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பதைபதைப்பு சம்பவத்தை, எதிர் குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் விடியோவாக பதிவு செய்துள்ளார். இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Two-Wheeler Rider Dies: தெருவில் சுற்றித்திரிந்த மாடு எமனான துயரம்; நீதிமன்ற ஊழியர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மரணம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement