Pune Car Accident: முதல் கியருக்கு பதிலாக ரிவர்ஸ் கியர்.. சுவரை உடைத்துக்கொண்டு விழுந்த கார்..!
வாகன நிறுத்துமிடத்தில் காரை முன்னோக்கி எடுப்பதற்கு பதிலாக, ரிவர்ஸ் கியரை இயக்கிய காரணத்தால் சுவரை உடைத்துக்கொண்டு கார் கீழ்தளத்திற்கு பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜனவரி 22, புனே (Pune News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே (Pune), விமன் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள குடியிருப்பில் வசித்து வரும் மக்களின் வாகனத்தை நிறுத்த, பிரத்தியேக அடுக்குமாடி வாகன நிறுத்தும் தளமும் இருக்கிறது. இதனிடையே, ஜனவரி 20ம் தேதி, இரவு சுமார் 10 மணியளவில் வாகன நிறுத்துமிடத்தின் இரண்டாவது தளத்தில் கார் ஒன்றை வாகன ஓட்டி நிறுத்த முற்பட்டார். அப்போது, அவர் முதல் கியருக்கு பதிலாக ரிவர்ஸ் கியரை தவறுதலாக செலுத்தி இருக்கிறார். இதனால் வாகனம் பின்னோக்கி இயங்கி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விஷயம் குறித்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. Black Magic In Office: வேலையை விட்டு தூக்க நினைத்த முதலாளி.. பில்லி சூனியம் வைத்த தொழிலாளி..!