ஜனவரி 22, பெல்லாரி (Karnataka News): கர்நாடக மாநிலம், பெல்லாரியில் உள்ள கர்நாடக பால் கூட்டமைப்பு கேஎம்எஃப் (KMF) நிர்வாக அலுவலகம் முன்பு அதிகாலையில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அலுவலக நுழைவு வாயில் அருகேயே சூனிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிறிய கலசம் போன்ற அமைப்பில் ஒரு நூலை சுற்றி, தேங்காயில் ஒரு தாயத்து பையை கட்டி, மூடியில் சின்னங்கள் அல்லது எழுத்துக்களை பொறிடது வைத்திருந்துள்ளனர். மேலும் பூசணிக்காய், தேங்காய் உடைக்கப்பட்டு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, ரூபாய் நாணயமும் வைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், சாம்பலும் அதிக அளவில் தெளிக்கப்பட்டிருந்தது. EPFO News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய மைல்கல்.!
பில்லி சூனியம் வைத்த தொழிலாளி:
தளத்தில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்தபோதிலும், சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையும் வீடியோவில் படம்பிடிக்கப்படவில்லை, எந்த காவலரும் இந்த செயலை நேரில் பார்க்கவில்லை. KMF நிறுவனம் தற்போது நிதி இழப்புகளுடன் போராடி வருகிறது, இதனால் 50 பேரை வேலைவிட்டு நீக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்களால் இந்த சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாந்திரீக வேலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர், மாந்திரீகம் செய்யப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டனர். மாந்திரீகம் செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.