மே 24, கோட்டா (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் வசித்து வருபவர் முகம்மத் வஸீம். இவர் சம்பவத்தன்று தனது காதலியுடன் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அச்சமயம் காதல் ஜோடிக்கு சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, காதலியை முன் இருக்கையில் அமர்த்திக்கொண்டவர் காதலி இறுக்க கட்டிப்பிடித்ததுடன் வேகமாக பயணித்தார். இந்த விஷயத்தை வேறொரு வாகனத்தில் வந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருக்கிறார். இதனையடுத்து, வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 294 ஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Bomb Threat: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை தீவிரம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)