ஜூலை 08, பிளிபிட் (Uttar Pradesh News): தென்மேற்கு பருவமழையானது வடமாநிலங்களை புரட்டியெடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களின் முக்கிய நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றன. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிளிபிட் (Pilibhit) மாவட்டththil ஓடும் சாரதா ஆற்றில் (Sharda River) வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள இரயில்வே ஆற்றுப்பாலம் ஒன்றை வெள்ள நீர் அடித்துச் சென்ற நிலையில், இரயில் போக்குவரத்து அவ்வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால், மாவட்ட தலைநகருடன் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் சாலைவழிப் போக்குவரத்தையும் துண்டித்து இருக்கிறது. Raigad Fort Flood: மலைக்கோட்டையின் அழகைகாணச்சென்று அலறிய மக்கள்; திடீர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த சோகம்.!
उत्तर प्रदेश का जिला पीलीभीत। यहां शारदा नदी में बाढ़ और बारिश से नई रेल लाइन की पुलिया बह गई है। ट्रेनों का संचालन बंद हुआ। pic.twitter.com/A9fNReX67i
— Sachin Gupta (@SachinGuptaUP) July 8, 2024
வெள்ளத்தால் வீதியில் நிற்கும் மக்களும், அடித்து செல்லப்பட்ட சாலை & இரயில் வழிப்போக்குவரத்து பாதையும்:
उत्तर प्रदेश : जिला पीलीभीत में शारदा नदी में आई बाढ़ से रोड टूटा। बाढ़ का पानी कई गांवों के अंदर घुसा। फसलें तबाह हुईं। करीब 20 गांवों का संपर्क जिला मुख्यालय से टूट चुका है। pic.twitter.com/8nxi4WiWak
— Sachin Gupta (@SachinGuptaUP) July 8, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)