Raigad Fort Flash Floods (Photo Credit: @pulse_pune X)

ஜூலை 08, ராய்காட் (Raigad News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், மகத் நகரில் புகழ்பெற்ற ராய்காட் கோட்டை (Raigad Fort) உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ள ராய்காட் கோட்டை, இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற, இந்தியாவில் எஞ்சியுள்ள பழமையான கோட்டைகளில் ஒன்றாகும். மராட்டிய மன்னார் சத்ரபதி சிவாஜி அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட ராய்காட் கோட்டை, முந்தைய காலங்களில் மராட்டிய சாம்ராஜ்யத்தின் தலைநகராகவும் இருந்தது. தற்போது கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இக்கோட்டைக்கு வந்து செல்வது வழக்கம். Mumbai Rains: ஒரேநாள் இரவில் மும்பையை புரட்டியெடுத்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.! 

ராய்காட் மலைக்கோட்டையின் அழகை காணச்சென்று அலறிய நபர்கள்:

மராட்டிய மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் ஓடுகிறது. கடந்த வாரம் கூட புனே பகுதியில் உள்ள அணைக்கட்டு மற்றும் நீர்வீழ்ச்சி வழித்தடத்தில் குளித்துக்கொண்டு இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நீரின் பிடியில் சிக்கி அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், ராய்காட் கோட்டையின் அழகை காண இன்று 30 க்கும் மேற்பட்டோர் மலைப்படிக்கட்டுகளை கடந்து சென்றனர். அச்சமயம் அங்கு திடீர் மழை பெய்தது.

இதனை மழை நீர் வெள்ளம்போல உருவாகி, மக்கள் பயணிக்கும் வழித்தடம் வழியே பாய்ந்து சென்றது. இதனால் பயணிகள் உயிரை கையில் பிடித்தவாறு அச்சத்துடன் உறைந்து இருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்கு பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை கூட்டமாக சேர்ந்து அவர்கள் பிடித்துக்கொண்டு இருக்கும்போது, வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது.