ஆகஸ்ட் 23, புதுடெல்லி (New Delhi): மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் (Ajay Kumar Bhalla) 5 ஆண்டுகள் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், இன்று உள்துறை அமைச்சகத்தின் செயலராக கோவிந்த் மோகன் ஐஏஎஸ்-ஐ நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த 1989ம் ஆண்டு சிக்கிம் ஐஏஎஸ் பேட்சில் தேர்வு செய்யப்பட்ட கோவிந்த் மோகன் (Govind Mohan IAS), மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக இன்று மதியம் முதல் செயல்படுவார். அவருக்கு மாதம் ரூ.2,25,000 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dengue Fever: பெங்களூர்வாசிகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை.. 10,500 பேருக்கு டெங்கு உறுதி.. சுகாதாரத்துறை அறிவிப்பு.!
உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு:
1989 batch Sikkim cadre IAS officer Govind Mohan assumes charge of new Union Home Secretary, succeeding Ajay Kumar Bhalla, whose five-year term ended yesterday. pic.twitter.com/pSOxupIHdy
— ANI (@ANI) August 23, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)