Karnataka Dengue Reports on 23 Aug 2024 (Photo Credit: @TOIBengaluru / Pixabay)

ஆகஸ்ட் 23, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் தற்போது தென்மேற்குப்பருவமழை (Southwest Monsoon) காரணமாக, நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி இருக்கின்றன. மேலும், பெருநகரங்களின் நீர் ஆதாரங்களும் அதிகரித்துள்ளன. மேலும், தினமும் பெய்து வரும் மழையினால் சாலைகளில் அவ்வப்போது நீரும் தேங்கி வருகிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தியும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

10 ஆயிரம் பேருக்கு டெங்கு:

இதனால் கர்நாடக மாநிலத்தில் பரவலாக டெங்கு (Dengue Cases) பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்குள் அடுத்தடுத்து மக்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி, பஞ்சாயத்து நிர்வாகங்கள் சார்பில் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனிடையே, கடந்த ஜனவரி 2024ல் இருந்து தற்போது வரை பெங்களூர் (Bangalore) நகரில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு டெங்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. Doctors Call Off Strike: பெண் மருத்துவர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

பரவுகிறது டெங்கு:

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, "கடந்த 24 மணிநேரத்தில் கர்நாடக 199 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 23,163 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21000 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருக்கிறார்கள். தற்போது 1184 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 968 பேர் வீட்டு தனிமையிலும், 214 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெங்களூர் நகரில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 103 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு, மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 10500ஐ கடந்துள்ளது.

கவனம் தேவை:

ஏற்கனவே கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஜிகா வைரஸ் (Zika Virus) பாதிப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. அது சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மீண்டும் அங்கு டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக டெங்கு வைரஸ் கொசுக்களால் பரவும் நோய் ஆகும். நாம் வசிக்கும் சுற்றுவட்டாரங்களில் சாலையோரம், டயர்கள், தேங்காய் மட்டைகளில் தேங்கியுள்ள நீரில் அவை வளரும் தன்மை கொண்டவை. உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால், உயிரிழப்புக்கு அவை வழிவகை செய்யும் என்பதால், கவனமுடன் இருப்பது நல்லது.