Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!

வேகமாக வந்த ஆட்டோ, திடீரென குறுக்கே புகுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Shocking Video: இருசக்கர வாகன ஓட்டியின் அலட்சியத்தால் சோகம்; இருவர் அப்பாவிகள் பரிதாப பலி.!
Bhiwandi Accident (Photo Credit: @PTI_India X)

மார்ச் 09, பிவாண்டி (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி பகுதியில் ஆட்டோ ஒன்று வந்துகொண்டு இருந்தது. அச்சமயம், இருசக்கர வாகன ஒட்டி சாலையை கடக்க முற்பட்டார். ஆட்டோ வேகத்தில் வந்துகொண்டு இருந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டியின் மீது மோதாமல் இருக்க எதிர்திசையில் பயணித்து விபத்தை தவிர்க்க முற்பட்டுள்ளார். அப்போது, ஆட்டோ சாலை நடுவே இருக்கும் கான்கிரீட் அமைப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. Times Now Survey: 2024 பாரளுமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?.. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு இதோ..! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 09, 2024 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).