Times Now 2024 General Parliament Election Survey (Photo Credit: @TimesNow X)

மார்ச் 09, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவை பொதுத்தேர்தல் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்தலுக்கான அதிகாரபூர்வ தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்கள் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையம் (Election Commission of India) சார்பில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தலைமையிலான (BJP NDA Alliance) கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான (Congress Alliance) கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

புதிய வியூகத்துடன் சுறுசுறுப்பு பணிகள்: மத்தியில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள பாஜக, தனது வியூகத்துடன் தொடர்ந்து (2024 Parliament Election) விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தனது வியூகத்தை பின்பற்றி மக்களிடம் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசு காற்பந்தாகிவிடும் என்பதால், இறுதிக்கட்ட அரசுத்திட்ட தொடக்கப்பணிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய பணிகளில் பிரதமர் மோடி மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநிலங்களுக்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் என பிரதமர் நரேந்திர மோடி சென்று வருகிறார். Glenn Phillips Superman Catch: எதிர்பார்க்கலையே... சூப்பர்மேன் போல பாய்ந்து கேட்ச் பிடித்த க்ளென்.. அசத்தல் காட்சிகள் இதோ.! 

டைம்ஸ் நவ் கணிப்பு இதோ: இந்நிலையில், டைம்ஸ் நவ் (Times Now) மற்றும் இடிஜி நிறுவனம் சார்ந்து நடத்திய கணக்கெடுப்புப்படி, மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியே ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் காப்பாற்றும் என தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 534 நாடாளுமன்ற தொகுதிகளில், பாஜக தலைமையிலான கூட்டணி 358 தொகுதிகள் முதல் 398 தொகுதிகள் வரை கைப்பற்றும். அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 110 தொகுதிகள் முதல் 130 தொகுதிகள் வரை மட்டுமே கைப்பற்றும். ஒய்.எஸ்.ஆர்.சி.பி 21 - 22 தொகுதிகளும், பிஜெடி 10 - 11 தொகுதிகளும், இதர 11 - 15 தொகுதிகள் கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி? ஏற்கனவே பாஜக 370 - 400+ தொகுதிகளில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. தற்போதைய தேர்தல் கருத்துக்கணிப்பு அதனை பிரதிபலித்து இருக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு நடப்பு ஆண்டும் வீழ்ச்சி ஏற்படலாம் என்பதை உறுதி செய்யும் வகையில், 110 தொகுதிகள் மட்டுமே அவர்களால் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது டைம்ஸ் நவ் சர்வேயில் உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.