மார்ச் 24, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள நரேலா (Narela Factory Fire Caught) பகுதியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று விடுமுறை தின என்பதால், குறைந்த அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், திடீரென தொழிற்சாலையில் கரும்புகை எழுந்து தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது. 3 மாடிகள் கொண்ட ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தீயை அணைக்கும் பணிக்காக 25 தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வாகனங்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)