Crows Attacking: ரோட்டில் நடந்து செல்லும் நபர்களை திட்டமிட்டு தாக்கும் காகங்கள்; வைரலாகும் வீடியோ.!

சாலையில் அமைதியாக நடந்து செல்வோரின் தலையை குறிவைத்து தாக்கும் காகங்களின் செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Crow Attacks (Photo Credit: @TeluguScribe X)

ஆகஸ்ட் 11, சிர்சில்லா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜன்னா சிரசில்லா (Rajanna Siricilla) மாவட்டம், கட்டா மைசம்மா கோவில் பகுதியில் பழைய பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் வாசல் பகுதியில் உள்ள கோவிலில், கடந்த சில நாட்களாக காகங்கள் தங்கி இருக்கின்றன. இவை அவ்வழியாக செல்லும் நபர்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. நடந்து செல்வோரை குறிவைத்து தாக்கும் காகங்கள், பின் அப்படியே மரத்தில் சென்று தங்கிவிடுகின்றன. இதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. காகங்கள் மனிதர்களை குறிவைத்து தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Boy Killed By Dog Bite: தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement