DRDO Successfully Tests Anti-Tank Missile: இந்தியாவின் புதிய சாதனை.. ஏவுகணை சோதனை வெற்றி.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!
டிஆர்டிஓ சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள களத்தடுப்பு தளத்தில் மேட்-இன்-இந்தியா மேன்-போர்ட்டபிள் ஆண்டி டேங்க் வழிகாட்டி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
ஆகஸ்ட் 13, ஜெய்சால்மர் (Rajasthan News): பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேன்-போர்ட்டபிள் ஆண்டி டேங்க் வழிகாட்டி ஏவுகணையை (Man-Portable Anti Tank Guided Missile) வெற்றிகரமாகச் சோதனை நடத்தியது. ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் அமைந்துள்ள களத்தடுப்பு தளத்தில் இந்த சோதனை நடந்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். மிகச்சிறிய அகச்சிவப்பு இமேஜிங் கருவியுடன் கூடிய இந்த ஏவுகணையை ஒரு தனி நபரே தூக்கிச் செல்லலாம் என்பது இதன் சிறப்பம்சம். இந்த ஆன்ட்டி-டேங்க் கைடட் மிஸைலில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தாக்கும் திறன், கூடவே டாப் அட்டாக் (Top attack) திறன்களும் உள்ளன. எல்லாவற்றை விட முக்கியமாக, இந்த ஆயுத அமைப்பில் டூயல்-மோட் சீக்கர் செயல்பாடும் (Dual-mode seeker functionality) உள்ளது. Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!
#WATCH | DRDO (Defence Research and Development Organisation) successfully test-fired the Made-in-India Man-Portable Anti Tank Guided Missile (MP-ATGM) at the field firing range in Jaisalmer, Rajasthan, recently: DRDO officials pic.twitter.com/J2AcG5LdiT
— ANI (@ANI) August 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

