Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

டிசம்பர் 09, விருத்தாச்சலம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், கச்சிப்பெருமாநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரஹாசன். இவரின் மகன் வேல்முருகன் (வயது 35). இவர் மதுபோதைக்கு அடிமையானவர் ஆவார். இதனால் அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டில் பிரச்சனை செய்து வந்துள்ளார்.

பிரிந்த தம்பதி:

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகனுக்கு திருமணம் முடிந்த நிலையில், கணவன் - மனைவி இடையே குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் வேல்முருகனின் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கே சென்றுவிட்டார். தற்போது வேல்முருகன் தனியாக வசித்து வருகிறார். Aadhav Arjunan: ஆதவ் அர்ஜுனன் தற்காலிக நீக்கம் - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு.. அதிரடி முடிவு.! 

மூதாட்டி மீது தாக்குதல்:

இந்நிலையில், போதைக்கு அடிமையான வேல்முருகன், தனது பாட்டி முத்துக்கன்னு (வயது 70) என்பவரிடம் மதுபானம் அருந்த பணம் கேட்டு இருக்கிறார். அவர் பணம் தர மறுக்கவே, ஆத்திரத்தில் கட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் முத்துக்கன்னு இரத்த வெள்ளத்தில் சரிந்து, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் விசாரணை:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், முத்துக்கண்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.