Dog Died in Classroom: அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் தனியே சிக்கிய நாய் பலி; தாகம், பசியால் சோகம்..!

தாகம், பசியினால் பள்ளி அறையில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்ட நாய் ஒன்று பரிதாபமாக பலியானது. பள்ளியில் ஊழியர்கள் அறைக்குள் யாரேனும் இருக்கின்றனரா? என்பதை முறையாக சோதிக்காத காரணத்தால் பலியான உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Dog Died in Classroom: அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் தனியே சிக்கிய நாய் பலி; தாகம், பசியால் சோகம்..!
Dog Died in Classroom (Photo Credit: @SachinGuptaUP X)

மே 22, புலந்த்சஹார் (Uttar Praesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம், ஷிகார்பூர் பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த மே 20ம் தேதி பள்ளி பூட்டப்பட்டு உள்ளது. நேற்று நிர்வாகத்தினர் பள்ளிக்கு சென்றபோது, ஒரு வகுப்பறையில் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் பதறிபோனவர்கள், அறையை திறந்து பார்த்தபோது நாய் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. தவறுதலாக வகுப்பு அறைக்குள் சிக்கிக்கொண்ட நாய், வகுப்பறை பூட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற இயலாமல் பசி மற்றும் தாகத்தால் தவித்து பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறது. Poco F6 Pro: 120Wபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன், போக்கோ F6 ப்ரோ ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2024 07:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).