Poco F6 Pro (Photo Credit: @ZionsAnvin X)

மே 21, சென்னை (Technology News): போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எப்6 ப்ரோ (Poco F6 Pro Smart Phone) ஸ்மார்ட் போனை இந்த வாரம் உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது சில முன்னணி மொபைல் பிராண்ட்களுடன் போட்டி போடும் என நம்பப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை இதில் பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்: போக்கோ F6 ப்ரோவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC(Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவை கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற கடினமான செயல்பாடுகளுக்கு சிறந்த பயனை அளிக்கும். இதில், 16GB RAM உடன் வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மென்மையான மல்டி டாஸ்க்கிங் செயல்பாடுகளை கொண்டுள்ளதாக உள்ளது. இது 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே, முன் கேமராவுக்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட்டையும் கொண்டிருக்கும். Bus Conductor Sentenced To 20 Years Imprisonment: சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கு விசாரணை; பேருந்து நடத்துனருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

கேமரா அமைப்பு பற்றிய தெளிவான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், மூன்று ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதன்மை சென்சார் 50MP, ultrawide sensor மற்றும் macro lens ஆகியவற்றுடன் இணைக்கப்படும். மேலும், 16MP செல்பி கேமரா உள்ளது. இதில், 5000mAh பேட்டரி திறன் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விலை: உலகளவில் கிடைக்கும் 16GB RAM + 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு EUR 619 என்பது, இந்தியா மதிப்பில் ரூ. 55,800 என்ற தொடக்க விலையாக இருக்கலாம். இதன் அறிமுக விழா துபாயில் வருகின்ற மே 23-ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.