Girl Attacked by Stranger: தனியே நடந்துகொண்டிருந்த பெண்ணின் மீது தாக்குதல்; இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் காட்சிகள்.!
மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த இளம்பெண்ணின் மீது மர்ம நபர் அதிர்ச்சிதரும் வகையில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
மே 17, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் (Kanpur Crime News), திரிநேத்ரா அபியின் பகுதியில் சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் மார்க்கெட்டுக்கு சென்று பின்னர் மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் பெண்ணை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், அவரை வாயை பொத்தி கீழே தள்ளி தாக்கி கடத்த முயற்சித்தார். பெண்மணி அலறி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிக்கு வலைவீசப்பட்டுள்ளது. Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)