Vlogger Couple Sexual Abuse Case in Tirussur (Photo Credit: Instagram)

மே 17, திருச்சூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பூரம் திருவிழா (Thrissur Pooram Festival), சர்வதேச அளவில் புகழ் பெற்றது ஆகும். இத்திருவிழாவில் யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதாலும், அதன் கொண்டாட்டங்கள் பாரம்பரியங்கள் மிகுந்தது என்பதாலும் உலகளாவிய கவனத்தையும் திருச்சூர் பூரம் திருவிழா பெற்றிருக்கும். இதனால் உலகளாவிய சுற்றுலா பயணிகளும் அங்கு வந்து செல்வார்கள் என்பதால், பண்டிகை நாட்களில் கொண்டாட்டங்கள், கண்கவர் வான வேடிக்கைகள் என களைகட்டி இருக்கும். பாதுகாப்பு பணிகளுக்காக காவல் துறையினரும் குவிக்கப்பட்டு இருப்பார்கள். குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு முத்துக்குடை பரிமாறும் 36 மணிநேர திருவிழாவும், வாணவேடிக்கையுடன் நடைபெறும். TN Weather Update: "இந்த மழை ட்ரைலர் மட்டுமே.. போட்டுத்தாக்கப்போகும் கனமழை" - தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை.! 

பாலியல் தொல்லை குறித்து வருத்தமான பதிவு: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பூரம் திருவிழாவை காணுவதற்கு, இந்தியாவில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகள் திருச்சூரில் முகாமிட்டு இருந்தனர். தம்பதிகள் இருவரும் தங்களின் பயணத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் விலாகர்ஸ் (Vloggers) என்பதால், பயணத்தில் நடக்கும் நிகழ்வுகளை விடியோவாக பதிவு செய்து வந்தனர். அச்சமயம், திருவிழாவில் வீடியோ எடுக்கும் போது, மெக்கென்சிக்கு ஒருவர் முத்தம் கொடுக்க வந்துள்ளார், மற்றொருவர் கீனன்யின் அந்தரங்க உறுப்பைத் தொட்டுள்ளார். இத்தகைய பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இந்த ஜோடிகள் (Vlogger Couple Sexually Harassed), சம்பந்தப்பட்ட வீடியோவை வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தது. Gurugram Shocker: தீர்க்கதரிசியான பார்க்கிங் பட இயக்குனர்.. காரை நிறுத்திய நபர்.. "கார் உங்கள்து தம்பி.. ஆனா பார்க்கிங் என்னோடது" என கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்..! 

குற்றவாளி கைது: இதனையடுத்து, திருச்சூருக்கு வந்த அமெரிக்க தம்பதிகளுக்கு, உள்ளூர் ஆட்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் உலக அரங்கில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தங்களுக்கு இதுகுறித்த எந்த புகாரும் வராத நிலையிலும், வீடியோவின் பேரில் புகார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் அம்மாநில காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. குற்றவாளியின் அடையாளத்தை கண்டறிந்து, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆலத்தூர் காவல் துறையினர் சுரேஷ் என்ற மதுவை, அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, சுரேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by UNSTUK with Mac & Keen (@macnkeen)