ஜூன் 12, கண்ணாவரம் (Andhra Pradesh News): ஆந்திர மாநிலத்தை பொறுத்தமட்டில் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, அம்மாநிலத்தில் தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்றாக செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த தேர்தலில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 150+ தொகுதிகளை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. 17+ தொகுதிகளை மட்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு (N Chandrababu Naidu) முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த பதிவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆகியோர் ஆந்திரா வந்தனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர்கள் ரஜினி காந்த், சிரஞ்சீவி மற்றும் பல அரசியல், சினிமா பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துள்ளனர். இந்த விழாவின் போது அமைச்சர் பவன் கல்யாண் தனது சகோதரர் மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்திக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். Post Office Monthly Income Scheme: அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்.. இணைவது எப்படி?.!
When Minister Pawan Kalyan requested PM Modi to meet his brother Megastar Chiranjeevi pic.twitter.com/PdWSKUkQcy
— Naveena (@TheNaveena) June 12, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)