ஜூன் 12, புதுடெல்லி (New Delhi): தபால் நிலையங்களில் (Post Office) பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மக்கள் தற்போது வங்கிகளை போல் தபால் நிலைய திட்டங்களில் இணைந்து பணத்தை சேமித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தபால் நிலைய திட்டங்கள் நேரடியாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது தான். நிதிக்கான பாதுகாப்புடன் உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் மாதாந்திர வருமானத்தை பொறுத்த வரையில், தபால் அலுவலகம் மாதாந்திர சேமிப்புத் திட்டம் (Monthly Income Scheme) முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்: இத்திட்டம் நிதியமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நடப்பு ஆண்டின் வட்டி விகிதம் 6.60% ஆக உள்ளது.கணக்கு தொடங்கும் காலத்தில் என்ன வட்டி இருக்கிறதோ அதுவே கணக்கு முடியும் வரை தொடரும். நாட்டின் சந்தை நிலவரத்தை பொருத்து வட்டி விகிதம் ஆண்டிற்கு ஆண்டு மாறுபடும். இது ஏற்கனவே தொடங்கிய கணக்குகளின் வட்டிகளை பாதிக்காது. Teachers Resign After Sexting Student: மாணவர்களிடம் வரம்பு மீறிய ஆசிரியைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா?.!
இத்திட்டத்தில் தனிநபர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து மாதம் மாதம் உறுதி செய்யப்பட்ட ஒரு தொகையை வட்டி வடிவத்தில் பெறுவார். இது வருமானமாக கருதப்படுவதால் வரி கட்டாயம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக வைப்புத்தொகை ரூ.4.5 லட்சம் எனில் மாதம் ரூ.2.475 மாத வட்டியாக கிடைக்கும்.
இத்திட்டத்தில் தனியாகவோ கூட்டாகவோ சேமிப்புக் கணக்கை தொடங்கலாம். கூட்டாக தொடங்கும் சேமிப்பு கணக்கில் 9 லட்சம் வரை சேமிக்கலாம். தனிநபர் குறைந்தபட்சம் ரூ.1500 முதல் 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த மாதாந்திர திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள். இதன் காலம் முடிந்த பிறகும் கூட நீட்டித்துக் கொள்ளலாம். இடையில் கணக்கை மூட நினைத்தால், 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகளில் 2% வரை தொகை கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும்.