ஜூலை 13, கர்நாடகா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம் கட்லூர் பகுதியில் வசித்து வருபவர் தாயப்பா. இவரது மனைவி சின்னி. தம்பதிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் இருவரும் கிருஷ்ணா நதிக்கு சுற்றுலா சென்ற நிலையில், செல்பி எடுத்த போது மனைவி சின்னி திடீரென கணவரை ஆற்றல் தள்ளிவிட்டுள்ளார். தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடிய தாயப்பா, அக்கம் பக்கத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது தனது மனைவி தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் தள்ளிவிட்டதாக கூறியவர், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு மன்றாடியுள்ளார். அதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Trending Video: இளம் ஜோடியை ஏரில் பூட்டி, பிரம்பால் அடித்து தண்டனை.. அத்தை மகனை மணந்ததால் கொடூரம்.!
கணவரை உள்ளூர் மக்கள் மீட்ட வீடியோ :
సెల్ఫీ తీసుకుందామని చెప్పి భర్తను నదిలోకి తోసి చంపాలనుకున్న భార్య
నదిలో కొట్టుకుపోతూ రాయి వద్ద చిక్కుకున్న భర్త.. తాడు సహాయంతో కాపాడిన స్థానికులు
కర్ణాటక రాయచూర్లో నదిపైన ఉన్న వంతెన వద్ద సెల్ఫీ తీసుకుందామని భర్తను కోరిన భార్య
సెల్ఫీ తీసుకుంటుండగా భర్తను నదిలోకి తోసేసిన భార్య… pic.twitter.com/HBL8IQuTmz
— Telugu Scribe (@TeluguScribe) July 12, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)