Rajasthan Shocker: காய்கறி வியாபாரியை அடித்தே கொலை செய்த காவல் ஆய்வாளரின் மகன்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

காவல் ஆய்வாளரின் மகன் ஒருவர், காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்துக்கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Rajasthan Shocker: காய்கறி வியாபாரியை அடித்தே கொலை செய்த காவல் ஆய்வாளரின் மகன்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Rajasthan, Jaipur Inspector Son killed Vendor (Photo Credit: @SachinGupta X)

ஏப்ரல் 05, ராஜஸ்தான் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், கர்னி விஹார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளரின் மகன் சஜிதிஷ் சர்மா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்தார். காவல் ஆய்வாளர் தனது (Inspector Son Killed Innocent) மகனை கட்டுப்படுத்த முயன்றும் பலன் இல்லை. காய்கறி விற்பனை செய்துகொண்டு இருந்த நபர் கொலை செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். இறுதியில் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி உண்மை அம்பலாகவே, காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். மேலும், பலியானவர் குறித்து விசாரிக்கையில், அவர் ஆக்ராவை பூர்வீகமாக கொண்ட காய்கறி விற்பனை செய்யும் தொழிலாளி மோகன் குமார் என்பது தெரியவந்தது. வீட்டின் வாசலில் நடந்த வாக்குவாத சம்பவத்தில் இச்சோகம் நடந்துள்ளது. Kidnap Drama Tragedy: பெற்றோரிடம் ரூ.30 இலட்சம் பறிக்க கடத்தல் நாயகம்; வெளிநாடு படிப்பு ஆசையில் புத்திமாறி நடந்த பகீர் சம்பவம்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).