ஏப்ரல் 05, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காவியா தாகத் (வயது 22). இவர் சம்பவத்தன்று மர்ம நபர்கள் தன்னை கடத்தியதாக பெற்றோருக்கு புகைப்படம் அனுப்பி, ரூ.30 இலட்சம் பணம் பறிக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால், பெற்றோர் மகள் ராஜஸ்தானில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சியெடுத்து வருவதாக புகார் அளித்தனர்.
அதிர்ச்சி தகவல் அம்பலம்: இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாணவி தனது ஆண் நண்பர் ஹர்ஷித் யாதவ் என்பவருடன் சேர்ந்து ரூ.30 இலட்சம் பணம் பறிக்க முயற்சித்து நடனமாடியது அம்பலமானது. விசாரணையை தொடர்ந்து தலைமறைவான இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவலும் அம்பலமானது.
ஒத்துவராத நீட்டை வற்புறுத்தி எழுதிவைத்த பெற்றோர்: அதாவது, காவியாவின் பெற்றோர் தங்களின் மகளை மருத்துவராகி பார்க்க வேண்டும் என ஆசையில் இருந்துள்ளனர். இதற்காக அவர் நீட் தேர்வும் எழுதிய நிலையில், முதல் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் கோட்டா நீட் பயிற்சி மையத்தில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு படிக்க விருப்பம் இல்லாத காவியா, ரஷியா சென்று படிக்க திட்டமிட்டுள்ளார். Apple Layoff: முக்கிய திட்டங்கள் நிறுத்தம்; 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஆப்பிள்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
பிடித்த மேற்படிப்புக்காக நடந்த நாடகம்: இதற்காக தனது பெற்றோர் நிலம் ஒன்றை விற்பனை செய்து ரூ.30 இலட்சம் பணம் வைத்துள்ளதை அறிந்துகொண்ட காவியா, தனது நண்பரின் உதவியுடன் கடத்தல் நாடகமாடி இருக்கிறார். மேலும், தான் நீட் தேர்வில் எப்படியேனும் தோல்வியுற்றுவிடுவேன் என உறுதியானதால், அங்கு பணம் செலுத்தி வீணடிப்பதை விட ரஷியாவில் சென்று பயில்வது சரியானது என நினைத்து பணத்திற்காக நாடகமாடி இருக்கிறார் என்பது அம்பலமானது.
கேள்விக்குறியாக எதிர்காலம்., யூடியூப் வீடியோ பார்த்து கடத்தல்: தற்போது காவியா மற்றும் அவரின் நண்பர் ஹர்ஷித் ஆகியோர் குற்றவழக்கில் சிக்கி விசாரணையில் இருக்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. விசாரணையில், கடத்துவது எப்படி? என யூட்யூப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மற்றும் குறுந்தொடரை பார்த்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது.