Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!
ஜனநாயகத்தின் மான்பை அவமதித்த ராகுலின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலை அவர் செய்துள்ளார் என மத்திய அமைச்சர் கூறினார்.
மார்ச் 13, நாடாளுமன்றம் (Parliament): பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி-ஆளுங்கட்சி இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இலண்டனில் (London) இருக்கும் ராகுல்காந்தி (Rahul Gandhi) நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல், நாடாளுமன்ற சபாநாயகர் (Speaker) ராகுல் காந்தியின் வாதத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நமது ஜனநாயக மான்பை அவர் அவமதித்த காரணத்திற்காக, ராகுல் காந்தியின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் (Union Minister Giriraj Singh) தெரிவித்துள்ளார். Women Boils Boy Friend: கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட்டவரை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த இளம்பெண்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!