ஏப்ரல் 01, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், அவுரையா சத்தார் கோட்வாலி, திலக் நகர் ஜமால் ஷாஹ் பகுதியை சேர்ந்தவர் சலீம் கான். இவருக்கு அமன் கான், முஸ்கன் (10) என மகன், மகள் இருக்கின்றனர். சம்பவத்தன்று காலை 10:30 மணியளவில் முஸ்கன் (Kanpur School Girl Kidnap Attempt) பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், வீதி ஒன்றில் சிறுமியை இடைமறித்த நபர், அவரை கடத்திச்செல்ல முற்பட்டுள்ளார். பதறிப்போன சிறுமி அலறியதால் மர்ம நபர் அவரை கைவிட்டார். இதனால் சிறுமி அங்கிருந்து ஓடிவந்து தப்பினார். இந்த விஷயம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரியவரவே, அவர்கள் சிசிடிவி கேமிரா ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கிறார். Sub Inspector Suicide: தேர்தல் கூடுதல் பணியால் சோகம்? விடுமுறை கிடைக்காமல் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)