SI Satyendra Varma Gun Shoot File Pic (Photo Credit: @SachinGuptaUP X Pixabay)

ஏப்ரல் 01, எட்டவாஹ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டவாஹ் மாவட்டம், சிவில் லைன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சத்யேந்திர வர்மா (வயது 37). இவருக்கு அங்குள்ள விர்ந்தவன் காலனியில் அரசு சார்பில் குடும்பத்துடன் தங்க வீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு சத்யேந்திர வர்மா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார்.

துப்பாக்கியால் (Etawah Cop Suicide Today) சுட்டுத்தற்கொலை: இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்த வர்மா, திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவர்களின் சோதனையில் சத்யேந்திர வர்மாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது. Car Rally for PM Modi in US: "மீண்டும் மோடி, வேண்டும் மோடி" - அமெரிக்காவே அதிர இந்தியர்களின் அசத்தல் பேரணி.. அமெரிக்காவிலும் மோடி மந்திரம்.! 

Death File Pic (Photo Credit: Pixabay)

விடுப்பு கிடைக்காத விரக்தியா? மனா அழுத்தமா? இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சத்யேந்திர வர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வர்மாவின் மரணத்திற்கு அதிகாரிகள் விடுப்பு எடுக்க அனுமதிக்காதது, கூடுதல் பணிச்சுமை காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். அதேவேளையில், காவல்துறையினர் சார்பில், அவர் கடந்த சில நாட்களாகவே மனரீதியான அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மனைவி, இரண்டு குழந்தைகளை விட்டு சோகம்: மறைந்த காவலர் சத்யேந்திர வர்மா, அங்குள்ள ஹரோடி மாவட்டம் பசகோரவர்மா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2018ம் ஆண்டு வர்மாவின் தந்தை பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் காவலர் பணிக்கு சேர்ந்தார். தனது மனைவி சவிதா வர்மா மற்றும் 2 குழந்தைகளுடன் சத்யேந்திர வர்மா பணியாற்றி வந்த நிலையில், அவரின் துயரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.